Ola Driver Slaps: ஓலா கார் ஓட்டுநரை திரைப்பட பாணியில் தூக்கிப்போட்டு வெளுத்த கும்பல்; லேசாக உரசியதால் ஆடி கார் கும்பல் பகீர்.!
முன்னால் சென்று கொண்டு இருந்த கார் திடீரென பிரேக் போட்டதில், ஓலா கார் ஓட்டுனர் லேசாக முன்புற காரின் மீது உரசும் நிலை உண்டானது. இதனால் ஆவேசமடைந்த நபர்கள், ஓலா ஓட்டுநரை அடித்து நொறுக்கினர்.
ஆகஸ்ட் 30, காட்கோபர் (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கார் ஒன்று வந்தது. இந்த ஆடி (Audi Car) காருக்கு பின்னால், ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வந்துள்ளது. ஆடி கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்ட நிலையில், ஓலா கார் அதன் மீது லேசாக பிடித்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்து ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி கீழே போட்டனர். திரைப்பட பாணியில் நடந்த இந்த பகீர் சம்பவத்தில், ஓலா ஓட்டுநர் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். DMK Worker Dies by Suicide: திமுக எம்.எல்.ஏ வீட்டு முன் நடந்த சோகம்; தீக்குளித்த தொண்டர் சிகிச்சை பலனின்றி பலி.!