DMK Worker Ganesan | DMK Flag (Photo Credit: @cinnattampi X / Wikipedia)

ஆகஸ்ட் 30, திருப்பரங்குன்றம் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் (Thiruparankundram), மூலக்கரை பகுதியில் மதுரை வடக்கு (Madurai North) சட்டப்பேரவை உறுப்பினர் & மாவட்ட திமுக செயலாளர் கோ. தளபதியின் இல்லம் இருக்கிறது. சம்பவத்தன்று எம்.எல்.ஏ வீட்டிற்கு வந்த திமுக பிரமுகரான மானகிரி கணேசன் (Ganesan) என்பவர், திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கணேசன் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்து, ஆளுநரை மாற்றம் செய்யக்கூறி தீக்குளித்து தற்கொலை செய்யவும் முயற்சித்தார். College Students Atrocity: மீண்டும் அதிகரிக்கும் ரூட் தல பிரச்சனை; வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ஃபயர் விடும் அறுந்த வால்கள்.! 

தன்னை கண்டுகொள்ளாததால் தொண்டர் விரக்தியில் அதிர்ச்சி செயல்:

இந்த விசயத்திற்கு பின்னர் திமுக நிர்வாகிகள் அவரை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படும் நிலையில், திமுக நிர்வாகிகள் ஒருசிலருக்கு எதிராகவும் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து கட்சி மேலிடம் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். இதனிடையே தான் மதுரை வடக்குத்தொகுதி எம்.எல்.ஏ வீட்டு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலை முன்பு, ஆளுநருக்கு எதிராக தீக்குளித்தவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். கட்சியின் கொள்கைக்காக தனது உயிரைக் கொடுக்க முயன்றபோதும், அமைச்சர்கள் தன்னை வந்து சந்திக்கவிலை என வேதனையில் இருந்தவர், அதுகுறித்து தலைமைக்கு புகார் அளித்தும் பலன் இல்லை. இதனால் அவர் உயிரை மாய்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது.