PM Modi With President Zelensky: உக்ரைன் - ரஷியா பிரச்சனையை பேசி தீர்க்க அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை.!
உக்ரைன் நாட்டின் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் மண்ணில் நடக்கும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஜூன் 14, பாசனோ (World News): இத்தாலி நாட்டில் ஜி7 (G7 Summit 2024) நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்களுடன், இந்திய சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் சந்தித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் (Volodymyr Zelensky) நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு நடத்தியது பயனுள்ளது உக்ரைன் - இந்தியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா ஆர்வத்துடன் இருக்கிறது. தற்போது அங்கு நடந்து வரும் சில சர்ச்சை (Ukraine Russia War) செயல்களில், இந்தியா மனிதனை மையமாக கொண்ட அணுகுமுறையை நம்புகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான அமைதிக்கான வழியை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார். Dr Subbiah Murder Case: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. 7 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)