அக்டோபர் 02, மாஸ்கோ (World News): ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப்பின் இந்தியாவின் நடவடிக்கை அதிரடியாக மாறியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழலில் அமெரிக்கா விதித்த பொருளாதார வரியையும், அதனால் வரும் சிக்கலையும் எதிர்கொண்டு வருகிறது. உலக நாடுகளில் வல்லரசான அமெரிக்காவும், இங்கிலாந்தும் இந்தியாவுக்கு எதிரான மறைமுக நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன. அதனை எதிர்கொள்ள இந்தியா சீனாவிடம் கொண்ட முரண்பாடுகளை கைவிட்டு, இரண்டு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாங்க உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றனர். ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுக்கு தேவையான பல்வேறு உதவிகளை ரஷ்யாவும், ரஷ்யாவுக்கு தேவையான பல்வேறு உதவிகளை இந்தியாவும் செய்து வருகிறது. Gemini Sports Car Prompts: ஜெமினியின் டிரெண்டிங் ஸ்போர்ட்ஸ் கார் Prompts.. வைரலாகும் அசத்தல் லுக்.!
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் (Russian President India Visit):
இதனிடையே, டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபரின் பயணத்துக்கு முன்னதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா வருகிறார். கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற ஐநா சபை 80வது அமர்வில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், இராணுவம், தொழில்நுட்பம், நிதி, மனிதாபிமான விஷயங்கள், சுகாதாரம், உயரிய தொழில்நுட்பம், ஏஐ தொழில்நுட்பம் ஆகிய விஷயங்கள் குறித்தும் இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு நாளில் விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்கா வலியுறுத்துவது என்ன?
உக்ரைனில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்யாவிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால், ரஷ்யா பிராந்திய பாதுகாப்பு கருதி போரை தொடருகிறது. உக்ரைனை சரணடையவும் வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், உக்ரைன் இங்கிலாந்து, அமெரிக்கா இணைந்த நேட்டோ படையில் இணைய ஆர்வம் காண்பிக்கிறது. நேட்டோ படையுடன் உக்ரைன் இணைந்தால், ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து உடைந்து உருவான உக்ரைன் பின்னாளில் எதிரிகளுடன் கைகோர்த்து ரஷ்யாவுக்கு எதிராக சதிச்செயல், தாக்குதலை முன்னெடுக்க உக்ரைன் நிலப்பரப்பு ஏதுவாக இருக்கும் என்பதால் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. அதாவது, இலங்கை, மாலத்தீவுகளில் சீன முதலீடுகள் வேண்டாம். அதனால் இந்தியாவின் தேச அச்சுறுத்தல் கேள்விக்குறியாகும் என இந்தியா இலங்கைக்கு வலியுறுத்துவதைப்போன்ற பிரச்சனை ஆகும். போரை நிறுத்தாத ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அதனை கண்டுகொள்ளாத ரஷ்யா தனது நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, வடகொரியாவின் வணிகத்தை பன்மடங்கு அதிகரித்தது. இதனால் ரஷ்யாவும் பொருளாதாரத்தில் வீழாமல் தப்பித்துக்கொண்டது. இந்த விஷயத்துக்கு நேரடி ஆப்பு வைக்க இந்தியா, சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
இந்தியா மீதான வரி:
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியா மீது வரியை அதிகப்படுத்தினால் ரஷ்யா அமைதியாகும். அதேபோல, தனது பொருட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் பார்க்கலாம் என அமெரிக்கா விரும்புகிறது. இந்த விஷயங்களுக்கு துளியும் இறங்காத இந்தியா தனது நிலையில் உறுதியாக இருக்கிறது. போர் விவகாரத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் இறங்காத ரஷ்யா, இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட வரி காரணமாக அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து, ரஷ்ய அதிபர் இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவுக்கு அடுத்தகட்ட தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.