Flying Modi APK Game (Photo Credit : Flyingmodigame.com)

நவம்பர் 03, சென்னை (Technology News): ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வரும் பலரும் தங்களது மொபைலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை போல சில விளையாட்டு ரீதியான ஆப்களையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டு என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும். தற்போது இளைஞர்கள் மற்றும் சிறார்கள் இடையே பிரீ பையர், பப்ஜி போன்ற சில விளையாட்டுகள் பிரபலமாக இருக்கின்றன. அதுபோல தேர்தல் காலங்களில் அரசியல் தலைவர்கள் ஓடுவது, பறப்பது போன்ற விளையாட்டுகள் அதிகம் செயல்பாட்டுக்கு வரும். இது போன்ற விளையாட்டு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏனெனில் இது போன்ற விளையாட்டுகளுக்கு கூகுள் எந்தவிதமான அங்கீகாரமும் அளிப்பதில்லை. GSAT-7R Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 பாகுபலி ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்.!

ஃப்ளையிங் மோடி கேம் ஆபத்து (Flying Modi Game Security Risks):

அதிக பயனர்களை குறைந்த காலகட்டத்தில் ஈர்க்க வேண்டும். அவர்களது தரவுகளை திருட வேண்டும் என்ற பல்வேறு முயற்சிகளுடன் என்று மர்மகும்பலால் இதுபோன்ற செயலிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஃப்ளையிங் மோடி (Flying Modi) எனும் மொபைல் கேம் பல ஆண்ட்ராய்டு பயனர்களை ஈர்த்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியை மையமாகக் கொண்ட இந்த விளையாட்டு நகைச்சுவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ளையிங் மோடி கேமை பொறுத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் தடைகளை கடந்து பறப்பதைக் காட்டுகிறது. இந்த செயலியை Flyingmodigame.com, ApkDirectory, Coinmobile, Apkrabi, ApkPure, ModFyp மற்றும் GitHub போன்ற மூன்றாம் தரப்பு இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.

சைபர் கிரைம் நிபுணர்கள் மோடி கேம் தொடர்பாக எச்சரிக்கை (Cyber Experts Warn Flying Modi Game):

இந்த ஃப்ளையிங் மோடி கேம் 2.0, 3.0, 5.0 போன்ற பல பதிப்புகளிலும் கிடைக்கிறது. இந்த விளையாட்டு செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இல்லை. அதே நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் மூன்றாம் தர இணையதள லிங்க் உடன் இணைத்து விளையாட்டு செயலிக்கான விபரங்கள் பகிரப்படுகின்றன. இதனை ஆர்வத்திலோ அல்லது அறியாமையிலோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் பட்சத்தில் நமது தரவுகள் திருடப்படலாம். நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் போன்றவற்றை திருடி சைபர் கிரைம் மோசடியாளர்கள் மோசடி செயலில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இவ்வாறான செயலிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் சைபர் கிரைம் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். அதேபோல இதுபோன்ற செயலிகள் மால்வேர் போன்ற வைரஸ்களை தங்களது சாதனங்களில் பரப்பும் வாய்ப்பு உள்ளது என்பதால் ஃப்ளையிங் மோடி APK கேம்-ஐ பதிவிறக்குவதைத் தவிர்ப்பது நல்லது.