Clash Between BRS & Congress Party Supporters: வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் முற்றியதில், பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீர் மோதல்: ஓடவிட்ட அதிகாரிகள்.!

தேர்தல் வாக்குப்பதிவை கவனிக்க வந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் நடந்து கைகலப்பானதால் அதிகாரிகள் களமிறங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

Visual from Video (Photo Credit: @PTI X)

நவம்பர் 30, ரங்காரெட்டி (Rangareddy): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு, இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 35,655 க்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில், 3.26 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தவுள்ளனர். மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதற்றமான வாக்குசாவடி மையங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 03ம் தேதி வெளியாகும். இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், ஆளுங்கட்சியாக பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடித்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 11 மணி நிலவரப்படி, 11% வாக்குகள் பதிவாகியுள்ளது. Baby Rescued Under the Rubble In Gaza: கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவித்த பச்சிளம் பெண் குழந்தை: 37 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்..! 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement