அக்டோபர் 15, சட்டப்பேரவை வளாகம் (Chennai News): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அவையில் கேள்வி நேரத்தின் போது, ஆளும் திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக தரப்பு கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தில், 40 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான விவாதம் குறித்து அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், இந்த விஷயத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அதிமுகவினர் கருப்பு பேட்ச் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் மற்றும் மரணத்துக்கு காரணம். அங்கு இருந்த மக்களுக்கு தண்ணீர் உணவு என எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. காவல்துறை மற்றும் அரசு சார்பில் உரிய முன்னேற்பாடுகள் வழங்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சியில் இந்த மாதிரியான துயரம் நடந்ததும் உடனடியாக அரசு செயல்பட்டு நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை அளித்தது என பேசினார். Gold Silver Rate: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்வு.. தொடர் உச்சத்தில் வெள்ளி.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகள்:
இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலடியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கரூரில் நடந்த துயரத்திற்கு விஜய் தான் காரணம் என சொல்வது எப்படிப்பட்டது? விஜய் வருகிறார் என்று தெரிந்தும் காவல்துறையினரை ஏன் உரிய வகையில் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கவில்லை. குறைந்த அளவிலான பணியாளர்களே அங்கு பணியில் இருந்தார்கள். முதலமைச்சர் மற்றும் ஏடிஜிபி கொடுக்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருக்கிறது. இரவோடு இரவாக அங்கு உயிரிழந்தவர்களின் உடல்கள் ஏன் பரிசோதனை செய்யப்பட்டன? ஒரு உடலை உடற்கூறாய்வு செய்ய ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் ஆகும் என்ற நிலையில், 39 பேரில் உடல்களும் காலை எட்டு மணிக்குள் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளன. இது எப்படிப்பட்டது? கரூர் ரவுண்டானா பகுதியில் வேண்டுமென்றே தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்று இடம் இருந்தும் வேலுச்சாமிபுரத்தில் திட்டமிடப்பட்டு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் ஏன் இப்படி? என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைப்பதிவு (TN CM Stalin on Karur Stampede Tragedy):
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு… pic.twitter.com/GrzLEBEESv
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 15, 2025