Ma Subramanian (Photo Credit: @Subramanian_ma X)

அக்டோபர் 16, தலைமை செயலகம் (Chennai News): நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மாவட்டத்தின் கிராமப்பகுதிகளில் கடன், ஏழ்மை நிலையால் தவிக்கும் மக்களை குறிவைத்து கிட்னி திருடப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விஷயம் குறித்த விசாரணையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர், 2 மருத்துவமனைகளின் சிறுநீரக அறுவை சிகிச்சை தொடர்பான உரிமம் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து அரசிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. Gold Silver Rate: ரூ.95,000ஐ கடந்தது சவரன் தங்கம்.. ரூ.12,000ஐ நெருங்கும் கிராம் தங்கம்.. தங்கம் விலை இன்று.. விபரம் இதோ.! 

அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்:

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த தமிழ்நாடு மக்கள் மறுவாழ்வு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சிறுநீரக முறைகேடு தொடர்பாக தொலைக்காட்சியில் வந்த செய்தியின் பேரில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு நாமக்கல், திருச்சி, பள்ளிபாளையம் பகுதியில் விசாரணையும் நடந்தது. முதற்கட்டமாக விதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மனித உறுப்பு மாற்று சட்டம் விதி மீறப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு விவகாரத்தில் ஈடுபட்ட ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகியோரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வானிலை: அடுத்த 3 மணிநேரம் முதல் இன்று முழுவதும் வெளுக்கும் கனமழை.. லிஸ்ட் இதோ..! இந்த மாவட்ட மக்கள் குடையோட வெளியே போங்க.! 

உரிமம் ரத்து, கைது நடவடிக்கை:

எதிர்காலத்தில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, நிகழ்வுகள் காட்சிப்பதிவு செய்யவும் விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது. அதுகுறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். உடலுறுப்பு விற்பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்பு இதுபோன்ற செயல்கள் நடந்தாலும், அதனை அன்றைய அரசு செய்யவில்லை. கடந்த 2017ம் ஆண்டு காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவத்துறைக்கு கடிதமும் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், திமுக தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்ட இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விசாரணை மற்றும் நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என பேசினார்.