Bihar Assembly Elections 2025 (Photo Credit : @ANI X)

அக்டோபர் 06, பீகார் (Bihar News): பீகார் மாநில 2025 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Bihar Elections 2025) தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கையானது நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hospital Fire Accident: அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. ICU-வில் 8 பேர் உடல்கருகி பலி.!

வேட்பு மனு தாக்கல் தொடர்பான அறிவிப்பு :

பீகாரின் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல் அக்டோபர் 13ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அக்டோபர் 17ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் 18ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 20ஆம் தேதி திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு :