Trending Video: செல்போன் நம்பர் கேட்ட காய்கறி கடைக்காரர்.. செருப்பால் பதில் சொன்ன பெண்மணி.!
பீகாரில் காய்கறி வியாபாரி ஒருவர் பெண்மணியிடம் செல்போன் நம்பர் கேட்டதால் அவர் செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜூலை 21, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா பகுதியைச் சார்ந்த பெண்மணி ஒருவர் சம்பவத்தன்று அங்குள்ள காய்கறி கடையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனையாளர் ஒருவர் பெண்ணிடம் பேச்சு கொடுத்தவாறு அவரது மொபைல் நம்பரை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி செருப்பை கழட்டி பல மக்கள் முன்னிலையில் செல்போன் நம்பர் கேட்ட நபரை தாக்கி இருந்தார். இது தொடர்பான வீடியோவை அங்கிருந்த ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவிடவே, அது தற்போது வைரலாகி வருகிறது. பெண்ணின் செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில், இவ்வாறான தொல்லைகள் கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி காவல் நிலையத்தில் புகாரளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. Trending Video: மதுபோதையில் பாம்பை நூடுல்ஸ் போல கடித்து தின்ற இளைஞர்.. பதறவைக்கும் சம்பவம்.!