Trending வீடியோ: ஓடும் இரயில் ஏற முயற்சி: தவறி விழுந்த இளம்பெண்ணை நொடியில் காப்பாற்றிய பெண் இரயில்வே காவல்துறை அதிகாரி.!

பயணங்களை மேற்கொள்ளும்போது, நாம் பொதுப்போக்குவரத்தை உபயோகம் செய்தால் கட்டாயம் முன்னதாகவே இரயில் அல்லது பேருந்து நிலையங்களுக்கு சென்று காத்திருப்பதே நல்லது.

Visual from Video (Photo Credit: @WesternRly X)

டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): ஓடும் ரயில்களில் ஏறவோ இறங்கவோ கூடாது என்பது காலம் காலமாக பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வோர், தங்களின் இரயில் பயணத்திற்கு முன்னதாகவே கிளம்பி ரயில் நிலையத்திற்கு வருவது சரியாக இருக்கும். இறுதி கட்டத்தில் அவசர அவசரமாக வந்து, ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கும்போது அதில் ஏற, இறங்க முயற்சிப்பது நமது உயிருக்கு ஆபத்தை தரும் வகையில் அமையலாம். இந்த நிலையில், பெண்மணி ஒருவர் ஓடும் ரயில் நேரம் முற்பட்டபோது, அவர் தவறி கீழே விழுந்து விடுகிறார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, உடனடியாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றினார். அதிகாரியின் செயல் பாராட்டுகளை பெறுகிறது. எனினும், ஓடும் ரயில்களில் ஏறக்கூடாது என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ ரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. Kerala Corona Update: கேரளாவில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி., 3 பேர் பலி.. மீண்டும் உயரும் பாதிப்பால் மக்களால் அச்சம்: மாநில அரசு அறிவிப்பு..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)