Corona Virus (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, திருவனந்தபுரம் (Kerala News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கி, 2021-ல் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கமானது, கடந்த ஓராண்டுகளாக இல்லாமல் இருந்தது. இந்தியா கொரோனாவின் 3 அலைகளை எதிர்கொண்டு திணறிப்போனது. தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பின்னர் கொரோனா குறைந்தது.

ஜேஎன்1 கொரோனா: இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் உருமாறிய புதிய ரக கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் ஜேஎன்1 ரக கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டது. இதனால் அம்மாநில அரசு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளாவில் மீண்டும் பரவல்: மேலும், கொரோனா சார்ந்த பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 300 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். Girl Delivery Baby Rescued From Srivaikuntam: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது: தாய்-சேய் நலம்.! 

கட்டுப்பாடுகள் தீவிரம்: இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2669 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் அதிகரித்த கொரோனா கர்நாடகாவிலும் அதிகரித்ததால், அங்கு முகக்கவசம் அணிதல் உட்பட கொரோனா தடுப்பு விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்: மத்திய அரசும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாநில அரசுகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியும் இருந்தது. ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்தவும் கேட்டுக்கொண்டது.

மக்கள் அச்சம்: கடந்த ஆண்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா அதிகரிப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்குமா? அத்தியாவசிய வேலைகளுக்கு என்ன செய்வது? எனவும் பீதி அடைந்து வருகின்றனர்.