Viral Video: அணையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை காப்பாற்றிய வாலிபர்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் அணையில் தற்கொலைக்கு முயன்றபோது, வாலிபர் ஒருவர் அவரை காப்பாற்றும் வீடியோ (Trending Video) வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 05, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கஜூரியா லாசி அணையில் தற்கொலைக்கு முயன்ற (Woman Suicide Attempt)பெண்ணை, இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், பெண் ஒருவர் அணையின் கரையில் நிற்பதைக் காணலாம். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால், அதற்குள் அங்கிருந்த இளைஞர் ஒருவர், புத்திசாலித்தனமாகவும் சுறுசுறுப்பாகவும் அப்பெண்ணை லாவகமாக பிடித்து அவரை காப்பாற்றினார். பின், மேலும் சிலர் வந்து அவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி, இளைஞரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் ஃபில்டரால் பறிபோன உயிர்.. 56 வயது பெண்ணை கொன்ற 26 வயது காதலன்.!