UP Woman at 52 Killed by 26-Year-Old Instagram Lover (Photo Credit : @thetatvaindia X)

செப்டம்பர் 04, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் வசித்து வருபவர் அருண் (வயது 26). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாக பழகிவந்த நிலையில் இந்த பழக்கமானது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண் என்பதால் பெண்ணின் வயது என்ன? என்பது தெரியாமல் அருணும் இருந்து வந்துள்ளார். ராணியும் தனது உண்மையான வயதை மறைத்து ஃபில்டர் மூலம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாராமில் பதிவேற்றி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் :

இதனிடையே ராணியை சந்திக்க நினைத்த அருண் அவரை காண வேண்டும் என அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில், ராணியின் நடவடிக்கையில் அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின் இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ராணியின் வயது 52 என்றும், அவருக்கு முன்னதாகவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்த அருண் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக ஆத்திரமடைந்துள்ளார். மேலும் இது தொடர்பாக ராணியிடம் எதுவும் கேட்காமல் எனக்கு ரூ.1.5 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு பெற்றுள்ளார். GST 2.0: வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் வேளாண் பொருட்கள் வரை.. ஜிஎஸ்டி வரிகளில் அதிரடி மாற்றம்.! 

காதலி கழுத்தை நெரித்துக்கொலை :

பணம் பெற்ற பின் ராணி செல்போனில் தொடர்புகொண்ட போது அருண் பதிலளிக்காமல் இருந்துள்ளார். அவ்வப்போது செல்போனில் பதில் அளிக்கும் போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், கொடுத்த பணத்தை கேட்டும் ராணி வற்புறுத்தியுள்ளார். இதனால் தொல்லையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைத்த அருண் சம்பவத்தன்று ஆகஸ்ட் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக ராணியை வரவழைத்து பின் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள இடத்திற்கு ராணியை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

போலீஸ் விசாரணை :

பெண் சடலமாக கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அருண், ராணியை அழைத்து வந்தது தெரிய வரவே, அவரிடம் விசாரித்ததில் இன்ஸ்டாகிராம் பில்டர் மூலம் தன்னை ராணி ஏமாற்றி விட்டதாகவும், திருமணம் செய்யக்கோரி தொல்லை கொடுத்ததாகவும், அதனால் தான் கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.