Shocking Video: அந்தரத்தில் பறந்த சிலிண்டர்.. லாரி கவிழ்ந்த விபத்தில் வெடித்து சிதறிய சம்பவம்.. அரியலூரில் பரபரப்பு.!

Ariyalur Cylinder Explosion: அரியலூரில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறிய பதறவைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Ariyalur LPG Cylinder Lorry Accident (Photo Credit : @Srinietv2 X)

நவம்பர் 11, அரியலூர் (Ariyalur News): அரியலூர் மாவட்டம் வாரணவாசி பகுதியில் இன்று சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி பயங்கர விபத்தில் சிக்கியது. சாலையில் லாரி சென்ற போது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்த நிலையில், அதன் மீது லாரி மோதாமல் இருக்க ஓட்டுநர் அதிர்ச்சியில் வாகனத்தை திருப்பியதால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்ட நிலையில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் விழுந்து தீப்பிடித்து விபத்தில் சிக்கியது. இதில் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்து சிதறி தேசிய நெடுஞ்சாலையே போர்க்களமான நிலையில், இது தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஓரம் என்பதால் வீடுகளும் அருகில் இல்லை. ஒரு சில தனிவீட்டு கட்டிடங்கள் மட்டுமே இருந்ததால் அதன் மீது சிலிண்டர் விடாத காரணத்தால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது. Shocking Video: "என்னை கல்யாணம் பண்ணு" - வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ.!

சிலிண்டர் வெடித்து சிதறும் அதிர்ச்சி காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement