Virat Kohli: விராட் கோலி & பில் சால்ட் வெறியாட்டம்.. அசத்தல் வெற்றி அடைந்த பெங்களூர் அணி..!
இன்று பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. இதனால் பெங்களூர் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஏப்ரல் 13, ஜெய்ப்பூர் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 போட்டியில், இன்று நடைபெற்ற பெங்களூர் - ராஜஸ்தான் (RCB Vs RR Highlights IPL 2025) ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் பில் சால்டின் அதிரடி ஆட்டம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 17.3 ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. பெங்களூர் அணியின் சார்பில் களமிறங்கிய படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். பில் சால்ட் 33 பந்துகளில் 65 ரன்கள், விராட் 45 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இன்றைய போட்டியில் விராட் கோலி தனது 100 வது அரை சத்தத்தையும் பதிவு செய்திருந்தார். RCB Vs RR: வெற்றிபடிக்கட்டில் ஏறுமா பெங்களூர்? இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்.!
பில் சால்ட் அசத்தல்: