
ஏப்ரல் 13, ஜெய்ப்பூர் (Cricket News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று நடைபெறும் 28 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் இன்று மாலை 03:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் போட்டியில், ஆர்ஆர் Vs ஆர்சிபி அணிகள் நேரடியாக மோதிக்கொள்ளும் ஆட்டத்தை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar) செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். LSG Vs GT: ஐபிஎல் 2025: தொடர் வெற்றியை தக்கவைக்குமா குஜராத்? இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை.!
ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Royals Vs Royal Challengers IPL 2025):
இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் 5 போட்டிகளை எதிர்கொண்டு 3ல் வெற்றியடைந்துள்ள பெங்களூர் தொடர் வெற்றியின் வாயிலாக முன்னேறிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், 5 போட்டியில் 2ல் வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.