Shocking Video: கஞ்சா போதையில் அரசுப்பள்ளி மாணவர்களை வெட்ட துரத்திய கும்பல்.!
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர், பெருமாநல்லூர் சாலையில் கஞ்சா போதையில் இருந்த நபர்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் தகராறு செய்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "அரசுப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா போதையிலிருந்த நபர்கள் தகராறு செய்து, பள்ளி மாணவர்களை அரிவாளால் வெட்டத் துரத்திச் செல்லும் காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு. உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், பொது இடங்களில் போதையில் இருப்பவர்களால் பிரச்சினை ஏற்படாமல் கண்காணிக்க, காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளின் அருகே, போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். பள்ளி வகுப்பறையில் நேர்ந்த சோகம்.. 9 வயது சிறுமி மாரடைப்பால் சரிந்து விழுந்து மரணம்.. கண்ணீரில் பெற்றோர்.!
மாணவர்களை கஞ்சா போதை கும்பல் வெட்ட துரத்திய காணொளி :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)