School College Holiday (Photo Credit: @TimesofIndia X)

நவம்பர் 29, சென்னை (Chennai News): வங்கக்கடலில் உருவாகிய டிட்வா புயல் சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் மையம் கொண்டு இருக்கிறது. இந்த புயல் தொடர்ந்து 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இலங்கையில் கரையை கடக்கும்போது புயல் 4 கிமீ என்ற நிலையில் வேகத்தை குறைத்தாலும், பின் படிப்படியாக அதன் வேகத்தை அதிகரித்தபடி நகர்ந்து வருகிறது. இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால், தனுஷ்கோடிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.! 

கனமழை காரணமாக விடுமுறை:

பிற மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு செய்து, மாவட்டங்களின் நிலைமையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனிடையே, டிட்வா புயலின் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மழை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என கடும் சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.