Rajasthan Student Dies (Photo Credit : @AnwarMuloor X)

ஜூலை 17, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகாரின் டான்டா நகரில் வசித்து வந்த சிறுமி பிராச்சி குமாவத் (வயது 9). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மதியம் சக மாணவிகளுடன் மதிய உணவு சாப்பிட சென்ற சிறுமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வகுப்பறையிலேயே சரிந்து விழுந்த நிலையில், உடனடியாக சக மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சிறுமி மரணம் :

இதனால் பதறிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி செய்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பதறியடித்துக் கொண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற சிறுமி வாயைப்பொத்தி பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.! 

போலீசார் விசாரணை :

பள்ளிக்கு காலை ஆரோக்கியமாக வந்த மாணவி திடீரென மயக்கமடைந்ததன் காரணம் என்ன? என தெரியாமல் ஆசிரியர்கள் குழம்பிய நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவரின் விளக்கம் :

பள்ளியில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, உடல்நல குறைபாட்டிற்கான எந்த தீவிர அறிகுறிகளும் மாணவிக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், குழந்தைகளுக்கு சில நேரங்களில் பிறவியிலேயே இதய நோய் அல்லது மின் தூண்டலின் தொந்தரவுகள் இருக்கலாம். பெற்றோர் அவற்றை கவனிக்காத பட்சத்தில் இது போன்ற நிகழ்வுகள் நேரும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.