டிசம்பர் 30, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND 4th Test, Day 5) அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne) கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, முதல் பாக்ஸிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. PKL Final 2024: புரோ கபடி லீக் 2024; முதல்முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்..!
ஆஸ்திரேலியா அபாரம்:
அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் (Steven Smith) 140 ரன், மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 72, சாம் கோன்ஸ்டாஸ் (Sam Konstas) 60, கவாஜா (Usman Khawaja) 57 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2, சுந்தர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 119.3 ஓவர்கள் விளையாடி 369 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (Nitish Kumar Reddy) 114 ரன், ஜெய்ஸ்வால் 82, சுந்தர் 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட், லயன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா வெற்றி:
இதனையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 83.4 ஓவர்கள் விளையாடி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியில், இந்தியா வெற்றி பெற 340 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி நாளான இன்று, இந்தியா விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை தழுவியது. நீண்ட நேரம் காலத்தில் நின்று போராடிய ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 84 ரன்களில் அவுட் ஆனார். இந்தியா 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.