டிசம்பர் 30, புனே (Sports News): புரோ கபடி லீக் தொடரின் (Pro Kabaddi League) 11வது சீசனுக்கான இறுதிப் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் (Haryana Steelers Vs Patna Pirates) அணிகள் மோதின. இதுவரை பாட்னா பைரேட்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், 4வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. அதேபோல், கடந்த முறை இறுதிப் போட்டிக்கு சென்று தோல்வியை சந்தித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை ரெய்டு வர அறிவுறுத்தியது. IND Vs AUS 4th Test: முதல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி.. சுந்தர் அரைசதம் விளாசல்.., போராடும் இந்தியா..!
ஹரியானா ஸ்டீலர்ஸ் முன்னிலை:
முதலில் ரெய்டு சென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் புள்ளியை கைப்பற்றியது. முதல் 10 நிமிடங்களில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து, முதல் பாதி ஆட்டம் முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 15-12 என்ற கணக்கில் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது. தொடர்ந்து 2வது பாதியிலும் ஹரியானா அணி முன்னிலையில் தொடர்ந்தது. பாட்னா பைரேட்ஸ் அணியின் தேவாங்க் 4 முறை ரெய்டு சென்று 4 முறையும் ஒரு புள்ளிகளை எடுக்க முடியாமல் வீழ்த்தப்பட்டார்.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன்:
கடைசி 10 நிமிடங்கள் இருந்த போது, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு டூ ஆர் டை ரெய்டு அளிக்கப்பட்டது. அப்போது, வினய் 2 புள்ளிகளை கைப்பற்ற, பாட்னா பைரேட்ஸ் அணியை ஹரியானா அணி ஆல் அவுட் செய்து அசத்தியது. இறுதியாக 32-23 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.