Fan Propose Cricketer Wife: ஆஸி., அணி கேப்டனின் மனைவிக்கு காதலர் தினத்தில் ப்ரபோஸ் செய்த இந்திய ரசிகர்; பேட் கம்மின்ஸின் என்ன கூறினார் தெரியுமா?..!

2024 உலகக்கோப்பையை தட்டிச்சென்று மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரின் மனைவிக்கு ரசிகர் ஒருவர் காதலர் தின வாழ்த்து தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது.

Pat Cummins Lovers Day Wish for Wife Becky Cummins (Photo Credit: Instagram)

பிப்ரவரி 14, சிட்னி (Sports News): ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் & கேப்டன் பேட் கமின்ஸ் (Pat Cummins). சமீபத்தில் நடைபெற்ற 2024 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், இவரின் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி கோப்பையை தனது நாட்டிற்கு தட்டிச் சென்றது. அதிரடி ஆட்டக்காரரான பேட், தனது மனைவி பெக்கி கம்மின்ஸ் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

மனைவிக்கு காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த பேட் கம்மின்ஸ்: தற்போது விடுமுறையில் இருக்கும் பேட் கம்மின்ஸ், தனது மனைவியுடன் அங்கிருக்கும் சுற்றுலாத்தலத்திற்கு சென்று மகிழ்ச்சியாக தங்களின் பொழுதை கழித்தனர். அதனைத்தொடர்ந்து, அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பேட் கம்மின்ஸ், தனது மனைவியை குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த பதிவு வரவேற்பை பெற்று வந்தது. Paramount Global Layoff: 800 பேரை வீட்டிற்கு அனுப்பியது பாராமவுண்ட் குளோபல் நிறுவனம்; தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிரடியால் பணியாளர்கள் வருத்தம்.! 

வைரலாகும் பேட் கம்மின்ஸ் பதில்: இந்நிலையில், அப்பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்தியர் என அடையாளப்படுத்திய ரசிகர் ஒருவர், "நான் ஒரு இந்தியர், உங்களின் மனைவியை நான் காதலிக்கிறேன்" என கூறி இருக்கிறார். இதற்கு பதிலளித்துள்ள பேட் எந்தவிதமான சலனமும் பேசாமல், "நான் அதை அவருக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pat Cummins (@patcummins30)