ISPL 2024: இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்... சென்னை அணியை வாங்கிய சூர்யா..!

ஐ.எஸ்.பி.எல் எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.

ISPL (Photo Credit: @Suriya_offl X)

டிசம்பர் 27, சென்னை (Chennai): 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக ஐஎஸ்பிஎல் (ISPL) எனப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் (Indian Street Premier League) தொடர் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க உள்ளவர்கள் தற்போதே முன்பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. Ram Aayenge Song Video: அயோத்தி ராமர் கோவில் திறப்பு... சிறப்பு பாடல் வெளியீடு..!

சென்னை அணியை வாங்கிய சூர்யா: இந்த தொடரில் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி இருந்தனர். இந்த நிலையில் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement