நவம்பர் 13, பணகுடி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியை சேர்ந்த நபர் கருணாநிதி. இவர் சென்னையில் கேண்டினில் சப்ளையாராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, பிக் பாஸ் தினேஷின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பணகுடியைச் சேர்ந்தவர் தனது மனைவிக்கு தமிழ்நாடு அரசு மின்வாரிய துறையில் வேலை வாங்கித்தர வேண்டும் என நினைத்துள்ளார். இதுகுறித்த தகவலை தினேஷிடம் தெரிவித்தபோது, அவர் தனக்கு தெரிந்த நபர்கள் மூலமாக வேலை வாங்கித்தருவதாகவும், ரூ.3 இலட்சம் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். கருணாநிதியும் மனைவியின் வேலைக்காக பல மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்துள்ளார். IND Vs SA: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி.. முதல் டெஸ்ட் எப்போது? வெற்றி யாருக்கு? வானிலை நிலவரம் என்ன? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
பிக் பாஸ் தினேஷ் கைது (Bigg Boss Dinesh Arrested):
ஆனால், இதுவரை வேலையை வாங்கித்தர தினேஷ், கருணாநிதியை அலைக்கழித்து இருக்கிறார். இதனிடையே, கடந்த வாரம் நெல்லை வந்த தினேஷ் மற்றும் அவரது தந்தையிடம், கருணாநிதி வேலை குறித்து கேட்டுள்ளார். மேலும், வேலை இல்லை என்றால், பணத்தை தருமாறு கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தினேஷ் மற்றும் அவரது தந்தை கருணாநிதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதனைதொடர்ந்து, நடிகர் தினேஷை கைது செய்துள்ளனர். இவர் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.