Thulluvadho Ilamai Abhinay Death (Photo Credit : @kayaldevaraj X)

நவம்பர் 10, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷின் தோழராக நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் அபிநய் (வயது 44). இதனை தொடர்ந்து இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தாஸ், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டவர் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். மேலும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சைக்காக ரூ.28 லட்சம் தேவைப்படுவதாகவும் உதவி கோரி சமூக வலைத்தளத்தில் வீடியோவும் வெளியிட்டு இருந்தார். Siragadikka Aasai: வெளிச்சத்துக்கு வந்த ரோகிணியின் ரகசியம்.. பளார் விட்ட மீனா.. முக்கிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய் மரணம்:

இந்த விடியோவை கண்ட திரைபிரபலங்கள் பலரும் அவரின் மருத்துவ செலவுக்காக உதவி செய்தனர். விஜய் டிவியின் கேபிஒய் பாலா அவரது வீட்டிற்கே சென்று ரூ.1 லட்சம் மருத்துவ செலவுக்காக வழங்கி உதவி செய்தார். நடிகர் தனுஷும் மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சம் உதவி செய்திருந்த நிலையில், நடிகர் கேபிஒய் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் சிறப்பு விருந்தினராக அபிநய் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அபிநய் இன்று காலை சுமார் 4 மணி அளவில் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கயல் தேவராஜ் இரங்கல்: