Ram Aayenge Song (Photo Credit: @mansukhmandviya X)

டிசம்பர் 27, அயோத்தி (Ayodhya): வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் சிறப்புகள்: ராமர் கோவிலானது ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 161 அடி உயரத்தில் இந்த பிரமாண்டமாக கோவில் அமைய உள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. India Russia Sign Key Deal: கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்... இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தப்பம்..!

சிறப்பு பாடல் வெளியீடு: இந்நிலையில் ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு பாடல் (Ram Aayenge Song) ஒன்று வெளியாகியுள்ளது. அதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி கோவிலுக்குள் சென்று தீபம் காட்டுவது போன்று இருக்கும்.