IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா படுதோல்வி... வரலாறு படைத்த இந்திய அணி..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs SA (Photo Credit: @ICC X)

ஜனவரி 04, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1க்கு 1 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது. மேலும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் விளையாடியது. Xiaomi Redmi Watch 4: ரெட்மி வாட்ச் 4 வெளியீடு... அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

மாஸ் காட்டிய இந்திய அணி: முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆனால் இரண்டாவது டெஸ்டில் மாஸ் காட்டியுள்ளது. நேற்று முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை இந்திய அணி சுருட்டியது. அதன் பின் ஆடிய இந்திய அணி 153 ரன் எடுத்தது. இதைத்தொடர்ந்து , இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன் எடுத்தது. இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை வெறும் 79 ரன் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் தொடங்கியது. இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 என்ற இலக்கை எட்டியது. Iran Bombing: ஈரானை உலுக்கிய இரட்டை குண்டு வெடிப்பு.. 103 பேர் பலி..!

இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதேபோல் 31 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி கேப் டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement