ஜனவரி 04, தெஹ்ரான் (Tehran): 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட உயர்மட்ட தளபதி காசிம் சுலைமானியை (Iranian General Qassem Soleimani) நினைவுகூரும் வகையில் ஈரானில் விழா ஒன்று, காசிம் சுலைமானி கல்லறையில் நடைபெற்றது. அப்போது அந்த இடத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. Vietnamese EV Maker: தமிழகத்திற்கு வரப்போகும் புதிய இவி ஆலை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் தற்போது வரை 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த நிலையில் 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டுகள் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.