T20 World Cup Ambassador Usain Bolt: டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடர்.. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் அறிவிப்பு..!
ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 25, சென்னை (Sports News): டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC Men's T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. World Malaria Day 2024: உலக மலேரியா தினம்.. மலேரியாவால் என்னென்ன ஆபத்துகள் வரும்னு தெரியுமா?.!
இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர்.
(The above story first appeared on LatestLY on Apr 25, 2024 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

