ஏப்ரல் 25, புதுடெல்லி (New Delhi): மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2007 ஆம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் (World Malaria Day) அனுசரிக்கப்படுகிறது. அனோபிலிஸ் என்னும் பெண் கொசுக்கள் முலம் பரவும் இது தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது. உலகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் மலேரியா காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை மலேரியா தோற்று நோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
மலேரியா நோயின் அறிகுறிகள்: அதிகப்படியான காய்ச்சல் மற்றும் வியர்வை, அதிக குளிர், சுவாசப் பிரச்சனைகள், இருமல், தலைவலி மற்றும் தசைவலி, ரத்த சோகை , சோர்வு, மார்பு வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை தொடர்ச்சியாக இருந்தால் மலேரியா நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொண்டு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். Whirlpool Layoff: 1000 ஊழியர்களை அதிரடியாக வீட்டிற்கு அனுப்பிய வேர்ல்பூல் நிறுவனம்; தொடர் விற்பனை சரிவால் முடிவு.!
தடுக்கும் வழிமுறைகள்: நீர்த்தேக்கப் பகுதிகளில் இருக்கும் கொசுக்கள் மூலம் எளிதாக மலேரியா நோய் தாக்கிவிடும். எனவே வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமும் சுகாதாரமும் மலேரியாவை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிநீரை சுடவைத்து ஆறிய பின் பயன்படுத்துங்கள். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து கொசுக்கள் தங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆடைகள், கொசு வலை, கூடாரங்கள், வீட்டை சுற்றியுள்ள இடங்களில் கொசு மருந்துகளை அடித்து விடுங்கள்.
மலேரியா தடுப்பூசிகள்: மலேரியாவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் இருக்கின்றன. RTS, S/AS01 என்னும் தடுப்பூசி குழந்தைகளுக்கு மலேரியா உண்டாவதிலிருந்து தடுக்க உதவி செய்யும்.