Ambati Rayudu: ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார் அம்பதி ராய்டு.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!

எனது வாழ்நாளில் இறுதியான ஐ.பி.எல் தொடரில் நான் விளையாடுகிறேன் என்பதால், இந்த போட்டி ஆவலுடன் இருக்கும் என தெரிவித்தார்.

Ambati Rayudu (Photo Credit: Twitter)

மே 28 , குஜராத் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க இயலாத கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தவர் அம்பதி ராய்டு (Ambati Rayudu). இவர் தற்போது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் வலதுகை பந்துவீச்சில் சிறந்து விளங்கிய அம்பதி ராயுடு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது ஓய்வை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "2 பெரிய அணிகள் (MI & CSK), 204 போட்டிகள், 14 சீசன் தொடர்கள், 5 கோப்பைகள். நான் எனது பயணத்தை நிறைவு செய்கிறேன். இன்று இரவுதான் எனது ஐ.பி.எல் தொடரின் இறுதி பயணம். அனைவர்க்கும் நன்றி. இது ஒருவழி பாதை. திருப்புமுனை இல்லை" என தெரிவித்துள்ளார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement