Super Typhoon Ragasa in Hong Kong (Photo Credit: @Globupdate X)

செப்டம்பர் 24, ஹாங்காங் (World News): மேற்கு பசிபிக் பகுதியில் கடந்த வாரம் ரகாசா புயல் உருவானது. சூடான கடல் மற்றும் சாதகமான வளிமண்டல நிலைமைகளால் வெப்பமண்டல சூறாவளி வேகமாக தீவிரமடைந்து நேற்று முன்தினம், மணிக்கு 260 கிமீ வேகத்தில் காற்று வீசியது. வகை 5 சூப்பர் சூறாவளியாக மாறியது. அது பின்னர் பலவீனமடைந்து வகை 3 புயலாக மாறியுள்ளது. இந்த ஆண்டு உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகாசா சூறாவளியால் (Typhoon Ragasa), தைவானில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஹாங்காங்கைக் கடுமையான காற்று மற்றும் பலத்த மழையால் தாக்கிய பின்னர், இன்று (செப்டம்பர் 24) தெற்கு சீனாவில் கரையைக் கடந்தது. Today's Latest News In Tamil: தங்கம் & வெள்ளி விலை முதல் கலைமாமணி விருதுகள் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

ரகாசா சூறாவளி புயல்:

தைவானில் மழை வெள்ளத்தில் மூழ்கியதால், ஹாங்காங்கில் பெரிய அலைகள் எழுந்தன. அவை ஆசிய நிதி மையத்தின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் மோதின. நடைபாதைகளில் தண்ணீர் பாய்ந்து சில சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மூழ்கடித்தது. ரகாசா புயல் மக்கள் அடர்த்தியான பேர்ல் நதி டெல்டாவை நோக்கி நகர்வதால், குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் 9 அடி உயரத்திற்கு புயல் அலைகள் எழும் என்று சீனாவின் கடல் ஆணையம், இந்த ஆண்டு முதல் முறையாக அதன் மிக உயர்ந்த சிவப்பு அலை எச்சரிக்கையை வெளியிட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. புயல் எச்சரிக்கை, நாளை வரை அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், ஹாங்காங் விமான நிலையங்கள் மூடப்பட்டு, அங்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரகாசா சூறாவளி புயலின் கோரத்தாண்டவம்: