IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் மூன்றாவது டி20 ஆட்டம்.! நேரலையில் பார்க்க விபரம் உள்ளே.!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியுடன் இணைந்திருங்கள்.
ஜனவரி 26, ராஜ்கோட் (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. INDW Vs BANW U19 T20 WORLD CUP 2025: யு19 மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2025: இந்திய அணி அசத்தல்.. 8 ஓவரில் திரில் வெற்றி.!
அடுத்த ஆட்டம் எப்போது? (ENG in IND T20I Next Match Update 2025)
அதனைத்தொடர்ந்து, மூன்றாவது டி20 (India Vs England 3rd T20i Venue) ஆட்டம், குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், நிரஞ்சன் ஷா (Niranjan Shah Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, 28 ஜனவரி 2025 அன்று, இரவு 07:00 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் அன்று வெப்பநிலை பகல்நேர வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸ், இரவு நேர வெப்பநிலை 15 டிகிரி செல்ஸியஸ் இருக்கலாம் என வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை. காற்றின் வேகம் 3 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஓடிடியில் ஹாட் ஸ்டார் (Disney Hotstar)ல் நேரலையில் பாக்கலாம்.
இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
இந்த டி20 தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில், இந்திய அணி வெற்றிபெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடும். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமையும். மேலும், மூன்று போட்டிகளைத் தொடர்ந்து, அடுத்த 2 போட்டியும் சேர்த்து ஐந்து போட்டியிலும் வெற்றி அடைந்தால், இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி மிகப்பெரிய தோல்வியை உறுதி செய்யும். இது இந்திய கிரிக்கெட் ரசிச்கர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கும். அதேநேரத்தில், இந்திய அணி குஜராத் ஆட்டத்தில் சொதப்பினால், எஞ்சிய 2 போட்டிகள் இரண்டில், ஒன்றில் வெற்றி பெற்றவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். நடக்கப்போகும் போட்டியின் முடிவே அதனை தீர்மானிக்கும் என்பதால் காத்திருப்போம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)