INDW U19 Team (Photo Credit: @BCCIWomen X)

ஜனவரி 27, குலாலம்பூர் (Sports News): ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை 2025 போட்டி (ICC WOMENS U19 T20 WORLD CUP 2025), மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நைஜீரியா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் மோதிக்கொள்கின்றன. 31 ஜனவரி 2025 அன்று முதல் மற்றும் இரண்டாம் தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு, 02 பிப்ரவரி 2025 அன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.

வங்கதேசம் முதலில் பந்துவீச்சு:

இந்தியா சார்பில் நிகி பிரசாத் கேப்டனாக அணியை வழிநடத்த, அவரின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் திரிஷா, கமலினி, சங்கா, நிகி, ஐஸ்வரி, மிதிலா, ஆயுஷி, ஜோஷிதா, ஷப்னம், பருணிகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்று இந்தியா - வங்கதேச அணிகள் (India Women U19 vs Bangladesh Women U19) மோதிக்கொள்ளும், தொடரின் 7 வது ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் யு19 அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் வங்கதேச யு19 அணி மகளிர் அணி பேட்டிங் செய்தது. IND Vs ENG 3rd T20i Match: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது டி20 ஆட்டம்; நேரலையில் பார்ப்பது எப்படி? எங்கு நடக்கிறது? விபரம் இதோ.! 

இந்திய அணிக்கு டார்கெட்:

முதலில் பேட்டிங் செய்த யு19 வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால் அணி ரன்களை குவிக்க இயலாமல் தடுமாறியது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ஜன்னத்துல் ஆறாவது நபராக களம் இறங்கி 20 பந்துகளில் 14 ரன்கள் அடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ஏழாவது நபராக களம் இறங்கிய சுமையா 29 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் எட்டு விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேச கிரிக்கெட் அணி, 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான திரிஷா 31 பந்துகளில் 40 ரன்கள் அடித்து விளாசி இருந்தார்.

இந்திய அணி அசத்தல் வெற்றி - வங்கதேசம் படுதோல்வி:

கமலினி 5 பந்துகளில் 3 ரன்கள், சனிகா 5 பந்துகளில் 11 ரன்னும் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 20 ஓவரில் வங்கதேச அணி திணறி 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 7.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் வைஷ்ணவி சர்மா, தான் வீசிய நான்கு ஓவரில் 3 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவர் ஆட்ட நாயகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தொடரில் அடுத்த ஆட்டம் இந்திய யு19 பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் - ஸ்காட்லாந்து யு19 பெண்கள் கிரிக்கெட் அணிக்கும், 28 ஜனவரி 2025 (நாளை) நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டம் குலாலம்பூர் நகரில் இருக்கும் பயேமஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டத்தை தட்டிச்சென்ற வைஷ்ணவி: