IND Vs ENG 4th T20i 2025: பந்துவீச்சில் கலக்கிய ஹர்ஷித் ராணா.. இந்திய அணி திரில் வெற்றி..! தொடரை கைப்பற்றியது.!
பல சுவாரசியத்துடன் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தது. போட்டியின் (Cricket News Tamil) முடிவு குறித்த சுவாரசியத்தை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தொடர்ந்து படிக்கவும்.
ஜனவரி 31, புனே (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. குஜராத்தில் நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்தது. இன்று புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், (IND Vs ENG 4th T20i Match) நான்காவது டி20 ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்ததால், இந்தியா பேட்டிங் செய்தது. IND Vs ENG 4th T20i: அடிதூள்.. அரைசதம் கடந்த சிவம், ஹர்திக்.. இங்கிலாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு.. ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா.!
அடுத்தடுத்து விக்கெட் இழந்த இந்தியா:
போட்டியின் தொடக்கத்தில், இரண்டாவது ஓவரில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதலில் 1.1 ஓவரில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) விக்கெட் பறிபோனது. ஜேக்கப் பெத்தல் (Jacob Bethell) சஞ்சு எதிர்கொண்ட பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். திலக் வர்மா (Tilak Varma) 1.2 வது பந்திலேயே ஜோபர் ஆர்ச்சரிடம் (Jofra Archer) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) ப்ரைடன் கார்ஸிடம் (Brydon Carse) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் சபீக் முகமது (Saqib Mahmood) வீசிய இரண்டாவது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையை ஆட்டத்திற்கு வழங்கியது. அதனைத்தொடர்ந்து, ரிங்கு சிங் களமிறங்கி ஆட்டத்தின் தன்மையை மாற்றினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்.. IND Vs ENG 4th T20 போட்டியில் சாதனை படைத்த சபீக் முகமது.. சஞ்சு, தில, சூரியகுமார் விக்கெட் அடுத்தடுத்து காலி.!

பாதிக்கு மேல் தலைகீழாக மாறிய ஆட்டம்:
சஞ்சு சாம்சன் 3 பந்துகளில் ஒரு ரன் எடுத்து அவுட் ஆகினார். அபிஷேக் ஷர்மா 19 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அவுட் ஆகினார். திலக் வர்மா ஒரு பந்தில் ரன்கள் ஏதும் அடிக்காமலும், சூரியகுமார் யாதவ் நான்கு பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்காமலும் வெளியேறி இருந்தார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாறிய நிலையில், ரிங்கு சிங் களமிறங்கி அதிரடியாக நின்று ஆடி அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்துகளில் 30 ரன்கள் குவிக்க, சிவம் ட்யூப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அரை சதம் கடந்தது. சிவம் தான் எதிர்கொண்ட 33 பந்துகளில் 52 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இறுதியில் களமிறங்கிய வீரர்கள் சொற்பரன்களில் வெளியேறினாலும், இந்தியா 120 ரகளை தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டு, இறுதியில் நடந்த சுவாரஸ்யத்தன்மை காரணமாக 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, 151 ரன்கள் குவித்து அசத்தல் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் பந்துவீசிய சபிக் முகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். மறுமுனையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி இருந்தது. IND Vs ENG 4th T20i: டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து; இன்று வெற்றி யாருக்கு? சுவாரசியத்தை தந்துள்ள இந்தியா - இங்கிலாந்து ஆட்டம்.!
ரன் குவிப்பில் முனைப்பு காண்பித்த இங்கிலாந்து:
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடியவர்களில் பில் சால்ட் 21 பந்துகளில் 23 ரன்களும், பென் டக்கட் 19 பந்துகளில் 39 ரன்களும், ஹேரி புரூக் 26 பந்துகளில் 51 ரன்னும் அதிகபட்சமாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி இருந்தனர். எஞ்சிய லிவிங்ஸ்டன், ஜேக்கப், ப்ரைடன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஒவர்டன் 15 பந்துகளில் 19 ரன்கள் அடித்து போல்ட் அவுட்டாகி இறுதி ஓவரின் முதல் பந்தில் வெயியேறினார். களத்தில் மஹ்மூத் - ஆதில் ஆகியோர் இருந்தனர். இவர்களில் மஹ்மூத் கேட்ச் அவுட் ஆகியதை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 10 விக்கெட் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி நான்காவது டி20 ஆட்டத்தில் வெற்றி அடைந்தது. மேலும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 2025 போட்டித் தொடரையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இன்றைய போட்டியில் ரவி பிஷ்ணோய், ஹர்ஷித் ராணா 3 விக்கெட், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் எடுத்து அசத்தி இருந்தனர்.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

