IND Vs ENG 5th T20I: இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று; டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சு.!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி டி20 போட்டி 2025 இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் அப்டேட்களை தொடர்ந்து (Cricket News Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்துடன் இணைந்திருக்கவும்.

IND Vs ENG 5th T20I: இந்தியா - இங்கிலாந்து ஐந்தாவது டி20 ஆட்டம் இன்று; டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சு.!
IND Vs ENG 5th T20i Toss Update (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 02, மும்பை (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி (Team England), 5 டி20 போட்டிகள் (India Vs England T20i Series 2025) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் (IND Vs ENG ODI Series 2025) இந்திய கிரிக்கெட் அணியை எதிர்கொண்டு களம்காண்கிறது. இந்த தொடரில் டி20 ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 (India Vs ENG T20 1st Match 2025) ஆட்டத்திலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 ஆட்டத்திலும் (IND Vs ENG T20i 2nd Match 2025), இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. குஜராத்தில் நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்தது. நேற்று புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், (IND Vs ENG 4th T20i Match) நான்காவது டி20 ஆட்டம் நடைபெற்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. Team India Women's U19 Victory: இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி வெற்றி; டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தல்..!

இந்தியா பேட்டிங்:

ஐந்தாவது போட்டி, இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் சார்பில் (5th T20I Team India Squad) எஸ். சாம்சன், ஏ. சர்மா, டி. வர்மா, எஸ். யாதவ், எச். பாண்டியா, எஸ். துபே, ஆர். சிங், ஏ. படேல், எம். ஷமி, வி. சக்ரவர்த்தி, ஆர். பிஷ்னோய் ஆகியோர் இன்று களமிறங்குகின்றனர். இங்கிலாந்து அணியின் (5th T20I Team England Squad) சார்பில் பி.சால்ட், பி. டக்கெட், ஜே. பட்லர், ஜே. பெத்தேல், எல். லிவிங்ஸ்டோன், எச். புரூக், ஜே. ஓவர்டன், பி. கார்ஸ், ஜே. ஆர்ச்சர், ஏ. ரஷித், எம். வூட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது:

சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள்:

(The above story first appeared on LatestLY on Feb 02, 2025 07:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).