Team India Women's Cricket U19 Victory (Photo Credit: @BCCIWomen X)

பிப்ரவரி 02, குலாலம்பூர் (Sports News): ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கோப்பை 2025 போட்டி (ICC WOMENS U19 T20 WORLD CUP 2025), மலேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நைஜீரியா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் மோதிக்கொண்ட நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

இன்று இறுதி போட்டி (ICC WOMENS U19 T20 WORLD CUP 2025 Final):

இந்தியா சார்பில் நிகி பிரசாத் கேப்டனாக அணியை வழிநடத்த, அவரின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் திரிஷா, கமலினி, சங்கா, நிகி, ஐஸ்வரி, மிதிலா, ஆயுஷி, ஜோஷிதா, ஷப்னம், பருணிகா, வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணியை தென்னாபிரிக்க மகளிர் யு19 கிரிக்கெட் அணி (South Africa Women U19 vs India Women U19) எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மலேஷியாவில் இருக்கும் குலாலம்பூர், பாயுமஸ் கிரிக்கெட் ஓவல் (Bayuemas Cricket Oval) மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. மதியம் 12:00 மணியளவில் தொடங்கிய போட்டி, நடைபெற்று வருகிறது. இதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) ல் ஒளிபரப்பு செய்யப்படும். IND Vs SA Women's T20 World Cup: 82 ரன்களில் சுருண்ட யு19 தென்னாபிரிக்க பெண்கள் அணி; இந்திய மகளிர் அணி அசத்தல் பந்துவீச்சு.! 

82 ரன்களில் சுருண்டது தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி:

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ஜம்மா 14 பந்துகளில் 16 ரன்னும், கரபோ 26 பந்துகளில் 10 ரன்னும், மைக்கே வேன் 18 பந்துகளில் 23 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். அனைவரும் சொற்பரன்களில் வெளியேறிய நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மொத்தமாக 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி அசத்தல் வெற்றி:

எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.2 ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் 83 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் கமலினி 13 பந்துகளில் 8 ரன்கள் அடித்து அவுட்டாகி இருந்தார். திரிஷா - சனிகா ஜோடி நின்று ஆடி அணியை வெற்றிபெற வைத்தது. திரிஷா 33 பந்துகளில் 44 ரன்னும், சனிகா 22 பந்துகளில் 24 ரன்னும் அடித்து அசத்தி இருந்தனர். இந்த வெற்றியின் வாயிலாக இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, 2025ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது.

இந்திய மகளிர் யு19 கிரிக்கெட் அணி, ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றி:

திரிஷாவின் அசத்தல் பேட்டிங்-க்கு கிடைத்த வெற்றி: