IND Vs ENG 3rd T20I: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20; இந்தியா பவுலிங் தேர்வு.. அணியில் இணைந்த நட்சத்திர வீரர்..!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
ஜனவரி 28, ராஜ்கோட் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்திய அணி கொல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (ஜனவரி 28) ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் (IND Vs ENG) விளையாட உள்ளது. Gongadi Trisha: 53 பந்தில் சதம் விளாசிய கொங்காடி த்ரிஷா.. மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை..!
டாஸ் வென்று பவுலிங் தேர்வு:
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங் பதிலாக முகமது சமி (Mohammed Shami) இணைந்துள்ளார். இங்கிலாந்து அணியில், எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த போட்டியை இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்ற முனைப்பில் களமிறங்கும்.