IND Vs AUS 3rd Test: கேஎல் ராகுல், ஜடேஜா அபாரம்.. பாலோ ஆனை தவிர்த்தது இந்தியா.., பேட்டிங்கில் கலக்கிய பவுலர்கள்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 252 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்த்தது.

IND Vs AUS 3rd Test: கேஎல் ராகுல், ஜடேஜா அபாரம்.. பாலோ ஆனை தவிர்த்தது இந்தியா.., பேட்டிங்கில் கலக்கிய பவுலர்கள்..!
AUS Vs IND 3rd Test Day 4 (Photo Credit: @CricketNDTV X | @thenewsdrum X)

டிசம்பர் 17, பிரிஸ்பேன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் (AUS Vs IND 3rd Test, Day 4) போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் தொடங்கியது. IND Vs AUS 3rd Test: 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இந்தியா சொதப்பல்.. மழையால் முடிவுக்கு வந்த 3ஆம் நாள் ஆட்டம்..!

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 117.1 ஓவர்கள் விளையாடி 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 152, ஸ்மித் (Steven Smith) 101 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில், இந்திய அணி களமிறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 1, விராட் கோலி 3 மற்றும் ரிஷப் பண்ட் 9 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். மூன்றாம் நாள் ஆட்டம் 17 ஓவர்கள் விளையாடிய நிலையில், இந்தியா 4 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் அடித்தது. மழைக் காரணமாக 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேஎல் ராகுல் 33, ரோஹித் சர்மா 0 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இன்று 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முதலில் ரோஹித் சர்மா 10 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - ஜடேஜா நிதானமாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தனர். அப்போது, கேஎல் ராகுல் 84 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி ஜடேஜாவுடன் சேர்ந்து பாலோ ஆனை தவிர்க்க போராடினார். சற்று நேரத்தில் நிதிஷ் ரெட்டி 16 ரன்னிலும், ஜடேஜா 77 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இறுதியில், பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் (Akash Deep) இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாலோ ஆனை தவிர்த்தனர். நான்காம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறைவு பெற்றது. இந்தியா 74.5 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்களை இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 193 ரன்கள் பின்தங்கிய நிலையில், நாளை 5ஆம் நாளில் விளையாடவுள்ளது.

ரவீந்திர ஜடேஜா அரைசதம் விளாசல்:

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).