AUS Vs IND 3rd Test Day 3 (Photo Credit: @thenewsdrum X)

டிசம்பர் 16, பிரிஸ்பேன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் (AUS Vs IND 3rd Test, Day 3) போட்டி இன்று (டிசம்பர் 14) இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்தது. அதன்படி, அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். IND Vs AUS 3rd Test: இந்திய அணிக்கு எதிராக இமாலய ரன்களை குவித்த ஆஸி., உணவு இடைவெளிக்குள் 3 விக்கெட் குளோஸ்.. தடுமாறும் இந்தியா.!

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே, பிரிஸ்பேனில் (Brisbane) 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 13.2 ஓவர்களில் 28 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் (Heavy Rain) ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து, நேற்று விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 117.1 ஓவர்கள் விளையாடி 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 152, ஸ்மித் (Steven Smith) 101 ரன்கள் அடித்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில், இந்திய அணி களமிறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 1, விராட் கோலி 3 மற்றும் ரிஷப் பண்ட் 9 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அப்போது, ஆட்டத்தின் இடையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்டம் 17 ஓவர்கள் விளையாடிய நிலையில், இந்தியா 4 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் அடித்தது. மழைக் காரணமாக 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேஎல் ராகுல் 33, ரோஹித் சர்மா 0 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.