டிசம்பர் 28, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND 4th Test, Day 3) அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne) நேற்று முன்தினம் (டிசம்பர் 26) முதல் பாக்ஸிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 4th Test: ஆஸ்திரேலியா இமாலய ரன் குவிப்பு.. 2ஆம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்..!
ஆஸ்திரேலியா இமாலய ரன் குவிப்பு:
அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ் (Sam Konstas) 60 ரன்னிலும், கவாஜா (Usman Khawaja) 57 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 72 ரன்கள் அடித்து அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் சதம் (Steven Smith) விளாசி ஸ்மித் 140 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 122.4 ஓவர்களில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2, சுந்தர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
நிதிஷ் ரெட்டி - சுந்தர் இணை அபாரம்:
இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் 3, ராகுல் 24 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் மற்றும் கோலி கூட்டணி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அப்போது, ஜெய்ஸ்வால் 82 ரன்னில் ரன் அவுட்டானார். அடுத்து கோலி 36 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில், இந்தியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் அடித்திருந்தது. இந்நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில், பண்ட் 28 ரன்னிலும், ஜடேஜா 17 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது, சுந்தர் 50 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுபுறம் நிதிஷ் ரெட்டி (Nitish Kumar Reddy) தனது முதல் சதத்தை (105*) பதிவு செய்தார். இறுதியில், இந்தியா 116 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 358 ரன்கள் அடித்துள்ளது.
நிதிஷ் குமார் ரெட்டி முதல் சதம்:
The rising ⭐ of Indian cricket shines bright in the Boxing Day Test with a maiden Test hundred! 💪
Take a bow, #NitishKumarReddy! 🔥#AUSvINDOnStar 👉 4th Test, Day 3 | LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/xsKac0iCju
— Star Sports (@StarSportsIndia) December 28, 2024