டிசம்பர் 27, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND 4th Test, Day 2) அணிகள் மோதும் 4வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Melbourne) நேற்று (டிசம்பர் 26) முதல் பாக்ஸிங் டே போட்டியாக அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. IND Vs AUS 4th Test: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவிப்பு.. 4 வீரர்கள் அரைசதம் விளாசல்..!
ஆஸ்திரேலியா அபாரம்:
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ் (Sam Konstas) 60 ரன்னிலும், கவாஜா (Usman Khawaja) 57 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் (Marnus Labuschagne) 72 ரன்கள் அடித்து அவுட்டானார். மறுபுறம் ஹெட் 0, மிட்செல் மார்ஸ் 4, கேரி 31 ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் (Steven Smith) 68 ரன்கள், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2ஆம் நாள் ஆட்டம்:
இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் சதம் விளாசி ஸ்மித் 140 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 122.4 ஓவர்களில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2, சுந்தர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் 3, ராகுல் 24 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் மற்றும் கோலி கூட்டணி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். அப்போது, ஜெய்ஸ்வால் 82 ரன்னில் ரன் அவுட்டானார். அடுத்து கோலி ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில், இந்தியா 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்கள் விளையாடி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 6, ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.