IND Vs ENG T20i: இந்திய அணிக்கு 132 ரன்கள் இலக்கு; தடுமாறிய இங்கிலாந்து., அசத்திய இந்தியா.!
20 ஓவரில் தனது 10 விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்து இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் இணைந்திருங்கள்.
ஜனவரி 22, ஈடன் கார்டன் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம். IND Vs ENG: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி.. இந்திய அணி பந்துவீச்சு.!
இந்திய அணிக்கு 132 ரன்கள் டார்கெட்:
முதல் ஆட்டத்தில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடியவர்களில், ஜோஸ் பட்டர் 44 பந்துகளில் 68 ரன்னும், ஜோப்ரா 10 பந்துகளில் 12 ரன்னும், ஹேரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்னும் அதிகபட்ஷமாக அடித்திருந்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இங்கிலாந்து அணி நிலைதடுமாறி சொற்ப அளவிலான ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் அர்ஷிதீப், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டரிங் இன்று தரத்துடன் இருந்தால், இங்கிலாந்து அணி தடுமாறும் சூழ்நிலை உண்டாகியது. எஞ்சிய ஆட்டத்தில் இந்திய அணி இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி அடையுமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.