Fan Touches KL Rahul's Feet: கே.எல் ராகுல் காலில் விழுந்து, போட்டோ எடுத்து மகிழ்ந்த ரசிகர்: வைரலாகும் வீடியோ.!

தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில், ரசிகர் கிரிக்கெட் வீரரின் கால்களில் விழுந்து பின் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

Visuals From Video (Photo Credit @mufaddal_vohra X)

ஜனவரி 10, புதுடெல்லி (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கே.எல் ராகுல் (KL Rahul). அதிரடி பேட்டிங்-க்கு சொந்தக்காரர் என்ற பெருமையை கொண்ட ராகுல், தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் கவனிக்கத்தக்க நபர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு முதல் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, இந்திய அணிக்காக பலம்வந்த நபராக இருக்கும் கே.எல் ராகுலுக்கு ரசிகர்கள் ஏராளம் என்றும் கூறலாம். ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். முன்னதாக பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். Bengaluru CEO Kills Son: கணவரை பழிவாங்க 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாய்… திடுக்கிடும் தகவல்கள்..! 

கடந்த ஆண்டு பிரபல இந்திய நடிகையான அதியா ஷெட்டியை திருமணம் செய்த ராகுல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - தென்னாபிரிக்கா தொடரில் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து, இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள போட்டியிலும் அவர் கலந்துகொள்கிறார்.

ரசிகரின் அதிர்ச்சி செயல்: இந்நிலையில், கே.எல் ராகுலை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில், ரசிகர் ஒருவர் அவரின் காலில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ராகுல், அவரை தூக்கிவிட்டார். அதனைத்தொடர்ந்து, ரசிகர் தனது இன்முகத்துடன் கே.எல் ராகுலுடன் புகைப்படம் எடுத்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement