ஜனவரி 10, கர்நாடகா (Karnataka): செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையத்தின் இணை இயக்குநர் சுசனா சேத். இவர் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். 39 வயதாகும் சுசனா சேத், கோவாவில் தனது 4 வயது மகனுடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
அவர் விடுதிக்கு வரும் போது உடன் சுற்றிக் கொண்டிருந்த அவரது மகன் திரும்ப செல்லும் போது காணவில்லை. இதனை விடுதி ஊழியர்கள் சந்தேகித்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். கோவாவில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தினர் இருந்தபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் சுசனா சேத்திடம் மகன் பற்றி கேட்ட போது தனது மகன், நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறிவிட்டார். அந்த முகவரி கேட்ட போது பொய்யான முகவரியை கொடுத்ததில் மாட்டிக் கொண்டார். பின்னர் சுசனா சேத் உடமைகளை சோதனையிட்ட போது சூட்கேசில் அவரது 4 வயது மகனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. Pongal Festival in Tamilnadu: தமிழகத்தில் களைகட்டும் பொங்கல்.. குத்தாட்டம் போடும் மாணவிகள்..!
காவல்துறையினர் விசாரணை: 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்த காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுசனா கொலை செய்த காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சுசனாவிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருடன் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் கருத்து பிரச்சனைகளின் காரணமாக 2022 ஆம் ஆண்டு விவாகரத்திற்காக இவர்கள் நீதிமன்றம் அணுகியுள்ளனர்.
இந்நிலையில் இந்தோனேசியாவில் பணியாற்றி வரும் வெங்கட்ராமன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது குழந்தையை பார்க்க இந்தியா வந்துள்ளார். சுசானாவிற்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. அதன் காரணமாக குழந்தையை கோவாவிற்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார். தற்போது சுசன்னாவை ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து குழந்தையின் உடலானது தந்தை வெங்கட்ராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது நான்கு வயது சிறுவனின் இறுதி சடங்குகள் பெங்களூர் ஹரிஷ் சந்திராவில் நடைபெற்றது.
#WATCH | Karnataka: The last rites of the four-year-old boy who was murdered by mother Suchana Seth in Goa were performed at Harishchandra Ghat in Bengaluru. pic.twitter.com/pcDmIsFZQ4
— ANI (@ANI) January 10, 2024