Ahmedabad Rains: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி.. மழைக்கு வாய்ப்பா? அகமதாபாத் வானிலை நிலவரம் என்ன..?
ஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்த தகவல்களை இப்பதிவில் காண்போம்.
ஜூன் 03, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து, பிளே ஆப் சுற்று முடிவில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி, இன்று (ஜூன் 03) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. IPL 2025 Final: டாடா ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை.. வானிலை நிலவரம், நேரலையில் பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே..!
அகமதாபாத் வானிலை நிலவரம் (Ahmedabad Weather Today):
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Punjab Kings) அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அகமதாபாத்த்தில் பிற்பகலில் மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது, வெளியான வானிலை அறிக்கையில், பிற்பகல் 3 மணிக்கு 20%, மாலை 4 மணிக்கு 49%, 5 மணிக்கு 57%, 6 மணிக்கு 51% மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், இரவு 7 மணியில் இருந்து 11 மணி வரையில் மழை பெய்யும் வாய்ப்பு 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதிப்போட்டி திட்டமிட்ட நேரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)