GT Vs LSG: லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. ஷாருக்கான் போராட்டம் வீண்..!
ஐபிஎல் 2025 தொடரில், டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Titans Vs Super Giants) போட்டியில், லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மே 22, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025)தொடரில், இன்று (மே 22) குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் - ஐடன் மார்க்கரம் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. GT Vs LSG: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்.. குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பூரன்.., 236 ரன்கள் இலக்கு..!
டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Gujarat Titans Vs Lucknow Super Giants):
முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்கரம் 36 ரன்னில் அவுட்டானார். மார்ஷ், ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சதமடித்து (117 ரன்கள்) அசத்தினார். பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் (56*) கடந்தார். ரிஷப் பந்த் 6 பந்தில் 16 ரன்கள் அடித்தார். இறுதியில், லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் குவித்தது. குஜராத் அணி 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்தியது.
லக்னோ வெற்றி:
குஜராத் அணிக்கு கில்-சாய் சுதர்சன் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. இருப்பினும், சாய் 21, கில் 35, பட்லர் 33 ரன்களில் அவுட்டாகி பெவிலியின் திரும்பினர். இதனையடுத்து, ரூதர்போர்டு - ஷாருக்கான் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்நிலையில், ரூதர்போர்டு 38, அடுத்து வந்த திவேதியா 2, அர்ஷத் கான் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். தனி ஆளாக போராடிய ஷாருக்கான் 57 ரன்களில் அவுட்டானார். இறுதியில், குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் அடித்து, 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.