GT Vs LSG 1st Batting (Photo Credit: @JPIDN35691 X)

மே 22, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025)தொடரில், இன்று (மே 22) குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து, 7வது இடத்தை பிடித்துள்ளது. இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. GT Vs LSG: குஜராத் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. ஆறுதல் வெற்றி பெறுமா லக்னோ..?

டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Gujarat Titans Vs Lucknow Super Giants):

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் - ஐடன் மார்க்கரம் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்கரம் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து, களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் குஜராத் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். மார்ஷ், ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சதமடித்து (117 ரன்கள்) அசத்தினார். பூரன் அதிரடியாக விளையாடி அரைசதம் (56*) கடந்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 235 ரன்கள் குவித்துள்ளது.

மிட்செல் மார்ஷ் சதமடித்து அசத்தல்: