Mukesh Kumar: மூன்று போரில் தொடங்கி W0Wல் முடித்த முகேஷ் குமார்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 போட்டியின் இன்றைய ஆட்டத்தில் முகேஷ் குமார் தனது அசத்தல் பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தினார்.
ஏப்ரல் 22, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று லக்னோவில் உள்ள ஏக்நா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் எதிர் டெல்லி கேபிட்டல்ஸ் (Super Giants Vs Capitals) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிக்காக போராடி ஆட்டத்தில் விறுவிறுப்பு தந்துள்ளது. LSG Vs DC: வெற்றியை தக்கவைக்க போராடும் டெல்லி.. ஜொலிக்குமா லக்னோ? இன்று மோதல்.!
முகேஷ் குமார் அசத்தல்:
இந்நிலையில், முகேஷ் குமார் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சின்போது 4 விக்கெட் எடுத்து அசத்தினார். மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஆயுஷ் பதொனி, ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். இதில் அப்துலின் விக்கெட் மட்டும் கேட்ச் ஆகும். பிற மூன்றும் போல்ட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 159 ரன்கள் குவிக்க, 160 என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.